×

பெரம்பலூர் பாஜக கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தருக்கு எதிர்ப்பு: 5ஆண்டுக்குப் பிறகு தொகுதிக்குள் வருவது ஏன்? என கேள்வி


பெரம்பலூர்: பெரம்பலூர் தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் பாரிவேந்தருக்கு கிராமமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தொகுதிக்கு உட்பட்ட முசுறி அருகே உள்ள கொல்லங்குடி கிராமத்தில் பாஜக, ஐஜேகே உள்ளிட்ட கூட்டணி கட்சியினருடன் சென்று பாரிவேந்தர் வாக்கு சேகரித்தார். அப்போது அவருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கிராமமக்கள்.

கடந்த 5 ஆண்டுகளாக எங்கள் தொகுதிக்கு வரவில்லை என்றும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது ஏன் எனவும் சூழ்ந்து கொண்டு கேள்விகளை அடுக்கினர். கிராமமக்களின் எதிர்ப்பு அதிகரித்த நிலையில் கேள்வி எழுப்பிய ஒருவரிடம் நான் இங்கு வந்த போது நீங்கள் பார்க்கவில்லை என்று கூறி சமாளிக்க முயன்றார். தொடர்ந்து வேட்பாளர்களுடம்ன சென்ற பாஜக கூட்டணி கட்சி நிர்வாகிகலும் சென்று கேள்வி எழுப்பியவரை சமாதானம் செய்தனர். பின்னர் வாகனத்தில் இருந்தபடி பிரச்சாரம் செய்துவிட்டு அங்கிருந்து பாரிவேந்தர் புறப்பட்டு சென்றார்.

The post பெரம்பலூர் பாஜக கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தருக்கு எதிர்ப்பு: 5ஆண்டுக்குப் பிறகு தொகுதிக்குள் வருவது ஏன்? என கேள்வி appeared first on Dinakaran.

Tags : Perambalur ,BJP ,Parivendar ,BJP alliance ,Kollangudi ,Musuri ,IJK ,Dinakaran ,
× RELATED குமரி நாடாளுமன்ற தொகுதி தேர்வு...